அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால்! டெல்லியில் வெடிக்கும் இளைஞர்கள் போராட்டம்
எங்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லையெனில் டெல்லிக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் படையெடுப்பார்கள் என எச்சரித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கடந்த மாதம் 28ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவளித்ததுடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார், 21 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது, கடந்த 18ம் தேதி டெல்லி போலிசாரால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து 20ம் தேதி டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் ஆதரவாளர்கள் பேரணி நடத்த போலிசார் தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சிஜேபி கட்சிக்கான ஆதரவு பெருகி வருகிறது, தமிழ்நாட்டிலும் மாணவர்கள், ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா பேசுகையில், மிகப்பெரிய இயக்கமாக சிஜேபி உருவெடுத்துள்ளது, அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் லட்சக்கணக்கான இளைஞர்கள் டெல்லியை நோக்கி படையெடுப்பார்கள்.

அமைதியான வழியில் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம், காந்தி, அம்பேத்கர் வழியில் பயணிக்கிறோம், போலிசார் மாணவர்களுக்கு எதிராக திரும்பியபோது தான் குழப்பம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
மேலும் அரசியல் கட்சிகளின் ஆதரவை தாங்கள் வரவேற்பதாகவும், தங்களின் கோரிக்கைகள் உண்மையானவை எனவும் தெரிவித்துள்ளார்.
