ஐபிஎல் 2023: டெல்லியின் அணியின் கேப்டன் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் போட்டி
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 ஐபிஎல் போட்டியில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின.
@cricbuzz
இந்தநிலையில் முதலில் ஆடிய டெல்லி அணி 144 ஓட்டங்கள் எடுத்திருந்தனர். இரண்டாவதாக களமிறங்கிய ஹைதராபாத் அணி அந்த ஓட்டங்களை எடுக்க முடியாமல் டெல்லியின் பந்து வீச்சில் சுருண்டது.
Line, length and, ?????? ?
— Delhi Capitals (@DelhiCapitals) April 25, 2023
How good was that bowling effort by our bowlers? ?#YehHaiNayiDilli #IPL2023 #SRHvDC pic.twitter.com/GZ2zWS2B1c
இதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய அக்சர் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் மட்டுமே தேவையென்ற நிலையில் முகேஷ் குமார் அருமையாக பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.
வார்னருக்கு அபராதம்
இந்நிலையில் அந்த போட்டியில் டெல்லி அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
@cricbuzz
இதன் அடிப்படையில் முதன் முதலாக இந்த தவறை டெல்லி அணி செய்ததால் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் விதியை மீறினால் அந்த அணிக்கோ அல்லது குறிப்பிட்ட வீரருக்கோ அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.