டெல்லியில் அதிகரிக்கும் PM2.5 நச்சு துகள்கள்: தலைநகரில் அதிகரிக்கும் சுகாதார நெருக்கடி
இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு
தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு தொடர்பாக இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் எவல்யூஷன்(Institute for Health Metrics and Evaluation) திடுக்கிடும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த தரவுகளின் படி, டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக 2023ம் ஆண்டு கிட்டத்தட்ட 17,188 பேர் நேரடியாக உயிரிழந்து இருப்பதாக அறிவித்துள்ளது.
அதிர்ச்சிகரமாக டெல்லியில் பதிவான 7 மரணங்களில் 1 மரணம் நச்சுக் காற்றுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CREA என்ற தனி ஆய்வும் இந்த காற்று மாசுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
முதன்மை காரணம்

IHME வெளியிட்ட அறிக்கையில், டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு PM2.5 என்ற நச்சுத் துகள்கள் முதன்மை காரணமாக நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் PM2.5 நச்சுத் துகள்களின் அளவு WHO நிர்ணயித்த தரங்களை விட பல மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த காற்று மாசுபாடு குழந்தைகளிடையே நுரையீரல் நோய்கள், இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் ஆஸ்துமா ஆகிய பாதிப்புகளை கடுமையாக உயர்த்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |