தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் காற்றின் தரம் மோசம்
தீபாவளி நாளான இன்று இந்திய தலைநகர் டெல்லியின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
காலை முதலே புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து பண்டிகையை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனால் காற்றின் தரம் மாசுபடலாம் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, இன்று அதிகாலை முதலே டெல்லியில் அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டதால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
இது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் உடல்ரீதியாக பல பிரச்சனைகளை உண்டாக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்குமாறு அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பட்டாசுகளுக்கு பதிலாக விளக்குகளை ஏற்றி பண்டிகையை கொண்டாடலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.