குடும்பப் பிரச்சினை... நீதிபதி எடுத்த அதிரவைக்கும் முடிவு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தன் மனைவி மற்றும் மனைவியின் சகோதரி கொடுத்த தொல்லை தாங்காமல் இளம் நீதிபதி ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நீதிபதி எடுத்த அதிரவைக்கும் முடிவு
இந்தியாவின் தலைநகர் டெல்லியில், நீதிபதியாக பணியாற்றிவந்த அமன் குமார் ஷர்மா (30) என்பவர், தன் மனைவி ஸ்வாதி மற்றும் மனைவியின் சகோதரியான நிதி மாலிக் ஆகியோர் கொடுத்த தொல்லை தாங்காமல் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
இந்த அதிரவைக்கும் சம்பவம் குறித்து விளக்கிய ஷர்மாவின் உறவினர் ஒருவர், ஷர்மாவின் மனைவியின் சகோதரியான நிதி, ஷர்மா ஸ்வாதி வாழ்வில் தலையிட்டு தொந்தரவு கொடுத்துவந்ததாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவரை மனோரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிதி, ஷர்மா ஸ்வாதி குடும்பத்தைக் கட்டுப்படுத்திவந்ததாகவும் ஷர்மாவின் உறவினர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, ஷர்மாவின் தந்தை தன் மகனைக் காணச் சென்றதாகவும், ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறாவிட்டால் பொலிசை அழைக்கப்போவதாக ஸ்வாதி மிரட்டியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
வீட்டுக்குள் மகனுக்கும் மனைவிக்கும் சண்டை நடப்பதை வெளியே நின்று கவனித்துக்கொண்டிருந்த ஷர்மாவின் தந்தை, பின் மகனை மொபைலில் அழைக்க, அவர் பதிலளிக்காததால் ஸ்வாதியிடம் தன் மகன் எங்கே என்று கேட்டுள்ளார்.
அவர் தனக்குத் தெரியாது என்று கூற, ஷர்மாவின் மொபைல் சத்தம் குளியலறைக்குள் இருந்து ஒலிக்கும் சத்தம் கேட்கவே, அக்கம்பக்கத்தவர்கள் கூடி, ஜன்னல் ஒன்றின் வழியாக உள்ளே இறங்கிப் பார்த்தால், அங்கு கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறார் ஷர்மா.
பேச்சு மூச்சின்றிக் கிடந்த ஷர்மாவை உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
உயிரிழந்த நீதிபதியான ஷர்மாவின் மனைவியான ஸ்வாதியும் நீதிபதிதான். ஸ்வாதியின் சகோதரியான நிதி, ஒரு IAS அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |