தங்கத்தை விற்று மனைவிக்காக iPhone 18 Pro வாங்கிய நபர்
Delhi man sells gold for iPhone 18 Pro: சமீபத்தில் வெளியான iPhone 18 சீரிஸ் மொபைல்களை பலரும் நெருக்கமானவர்களுக்கான பரிசாக வாங்கி மகிழ்ந்துள்ளனர்.
அதிகாலை முதலே நீண்ட வரிசை
நோய்டாவில் உள்ள DLF மால் ஆஃப் இந்தியா ஆப்பிள் ஸ்டோரில் iPhone 18 Pro விற்பனை தொடங்கிய முதல் நாளில், அதிகாலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்து புதிய போன் வாங்கிய வாடிக்கையாளர்களில் சிலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
MAN : I sold the gold passed down from my grandmother and great-grandmother to buy an iPhone 18 Pro Max for my wife. 🤯
— News Algebra (@NewsAlgebraIND) September 18, 2026
REPORTER : What? 😱
MAN : Yes. The iPhone 18 Pro Max is more important than any gold.
He sold the gold not for a house, his child’s future, or an investment,…
தங்கத்தை விற்று iPhone 18 Pro
அதில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்காக iPhone 18 Pro வாங்க தங்கத்தை விற்றதாக கூறினார். அவர், “முன்பு பணம் இல்லாததால் வாங்க முடியவில்லை. இப்போது வாங்க முடிகிறது. எதிர்காலத்தில் என்ன நிலைமை இருக்கும் தெரியாது. அதனால் மனைவிக்கு பரிசாக கொடுக்க விரும்பினேன்” என்று தெரிவித்தார்.
அவரது மனைவி முன்பு iPhone பயன்படுத்தியவர் அல்ல. ஆனால் புதிய Burgundy நிற மாடலை கேட்டதால், அவர் அதிகாலை முதலே ஆப்பிள் ஸ்டோருக்கு வந்தார்.
வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro பரிசு
இந்த நிகழ்வு மட்டும் அல்லாமல், பஞ்சாபில் இருந்து வந்த மற்றொரு வாடிக்கையாளர் தனது வருங்கால மனைவிக்கு iPhone 18 Pro வாங்கியதோடு, தனக்காக iPhone 18 Pro Max-யும் வாங்கினார். இரண்டுக்கும் சேர்த்து ரூ.3.5 லட்சம் செலவானதாக அவர் கூறினார்.

பலரும் தங்கள் வேலை விடுமுறையை எடுத்துக்கொண்டு, மாணவர்கள், தொழிலதிபர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினரும் முதல் நாளில் போன் வாங்க வரிசையில் நின்றனர். சிலர் முன்பதிவு செய்யாததால், போன் வாங்க முடியாமல் வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
இந்த விற்பனை நிகழ்வு, ஒரு சாதாரண மொபைல் வெளியீடாக மட்டுமல்லாமல், பரிசளிப்பு, உறவுகள், ஆசைகள் என பல நெகிழ்வான கதைகளை கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |