மெட்ரோ தளத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை: பிளாஸ்டிக் பையில் உடல் பாகங்கள்!
டெல்லி மாநகரத்திலுள்ள மெட்ரோ தளத்திற்கு அருகே பிளாஸ்டிக் பையில் பெண்ணின் தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை
இந்தியாவின் டெல்லியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள சராய் காலே பகுதியில் பெண்ணின் தலை மற்றும் பிளாஸ்டிக் பையில் சில உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் காவல் அதிகாரிகள் நேரில் சென்று பார்த்துள்ளனர்.
@Gettyimages
டெல்லியின் சராய் காலே கான் பகுதியிலுள்ள ரேபிட் மெட்ரோ கட்டுமான தளத்தில் பெண்ணின் உடல் பாகங்கள் மட்டும் அப்பெண்ணின் மண்டை ஓடுகள் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு கிடந்திருக்கிறது.
ரேபிட் மெட்ரோ கட்டுமான தளத்தின் மேம்பாலத்தை ஒட்டியுள்ள சராய் காலே கான் ISBT அருகே ஒரு பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்று துணை காவல்துறை கமிஷனர் (தென்கிழக்கு) ராஜேஷ் தியோ தெரிவித்துள்ளார்.
தொடரும் கொலைகள்
எய்ம்ஸ் ஆராய்ச்சி மையத்துக்கு உதிரிப் பாகங்களை அனுப்பிய பொலிஸார், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
@india.com
தடயவியல் குழுவினர் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்துள்ளனர். டெல்லி காவல்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இது போல் கடந்த ஆண்டு டெல்லி பொலிஸார் ஆப்தாப் பூனாவாலா என்ற இளைஞரை கைது செய்தனர்.
@ani
ஆப்தாப் என்பவர், ஷ்ரத்தா வாக்கரின் என்பவரது உடலை 35 துண்டுகளாக நறுக்கி, 300 லிட்டர் குளிர்சாதனப் பெட்டியில் கிட்ட தட்ட 3 வாரங்கள் தனது வீட்டில் வைத்திருக்கிறார்.
மேலும் அதனை தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.