இந்த முறை... சகோதரியிடம் கூறிய வார்த்தை: நீட் பயிற்சி மாணவன் விபரீத முடிவு
இந்தியாவின் டெல்லி நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீட் பயிற்சி
டெல்லியின் துக்ளகாபாதத்தில் தச்சராக வேலைபார்ப்பவர் ரஞ்சித் சர்மா. இவரது மகன் ரோஷன் சர்மா (23), கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்தில் தங்கி தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
சமீபத்தில் மகனை அழைத்துச் செல்ல ரோஷன் சர்மாவின் பெற்றோர் கோடா நகருக்கு வந்துள்ளனர். அவர் அழைத்தபோது வர முடியாது என ரோஷன் சர்மா மறுத்துள்ளார். இதனால் அவர்கள் டெல்லிக்கு திரும்பி விட்டனர்.
மூன்று நாட்கள் கழித்து வியாழக்கிழமை அதிகாலையில், ரயில் பாதைக்கு அருகிலுள்ள புதர்களில் ரோஷன் சர்மா சடலமாக கிடந்துள்ளார்.
அவரது உடலை பொலிஸார் மீட்டபோது, விஷப்பொருளை அவர் உட்கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரோஷன் சர்மாவின் பெற்றோரின் கூற்றுப்படி, அவரே கோடாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர முடிவு செய்து, ஒரு வருடம் கழித்து மற்றொரு மையத்திற்கு மாறியுள்ளார்.
தேர்வு எழுதப்போவதில்லை
கடந்த 4ஆம் திகதி நீட்-யுஜி தேர்வுக்கு சில வாரங்கள் முன்பு, ரோஷன் சர்மா தனது சகோதரிடம் போனில் பேசியுள்ளார்.
அப்போது நீட் தேர்வில் தேர்ச்சிபெற இன்னும் ஓராண்டு படிக்க வேண்டும். இந்த முறை தேர்வு எழுதப்போவதில்லை என கூறியுள்ளார்.
இதற்கிடையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு ரோஷன் சர்மாவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், மாணவரின் பெற்றோர் எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |