ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதல்... டெல்லி குண்டுவெடிப்பில் பயங்கரவாதிகளின் திட்டம் அம்பலம்
டெல்லியின் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதல் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ள நிலையில், ஹமாஸ் பாணியில் ட்ரோன் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ட்ரோன்களை பயன்படுத்த
காஸா எல்லையில் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதல் திட்டத்தை பின்பற்றவும், ட்ரோன்களை இதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் NIA விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தற்கொலை குண்டுதாரி உமர் உன் நபியுடன் செயல்பட்ட இரண்டாவது பயங்கரவாத சந்தேக நபரை கைது செய்த பிறகு, தேசிய புலனாய்வு முகமை இந்த மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கண்டுபிடித்துள்ளது.
டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட முதல் சந்தேக நபரான அமீர் ரஷீத் அலி, ஜம்மு காஷ்மீரில் வசிப்பவரான ஜாசிர் பிலால் வானி என்கிற டேனிஷ், ஸ்ரீநகரில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ட்ரோன்களை மாற்றியமைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு டேனிஷ் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாக விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் டெல்லியை நடுங்கவைத்த கார் குண்டுவெடிப்புக்கு முன்னதாக, முடிவு செய்த தாக்குதலுக்கு என ராக்கெட்டுகளை தயாரிக்கவும் முயற்சி முன்னெடுத்துள்ளதாக NIA வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த பயங்கரவாத சந்தேக நபர், தாக்குதலுக்குப் பின்னால் ஒரு தீவிர சதிகாரராகப் பணியாற்றினார் என்றும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிகபட்ச உயிரிழப்பு
கசிந்துள்ள தகவலின் அடிப்படையில், கமெராக்கள் பொருத்தப்பட்டு கனமான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடிய பெரிய பேற்றரிகள் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த ட்ரோன்களை உருவாக்க டேனிஷ் முயன்றுள்ளார் என்றே தெரிய வருகிறது.
மட்டுமின்றி, அவருக்கு சிறிய ரக ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் உருவாக்குவதில் அனுபவம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. டெல்லி குண்டுவெடிப்புக்கு முன்னர், அதிகபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில், நெரிசலான பகுதிக்கு ஆயுதம் ஏந்திய ட்ரோனை அனுப்ப பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் படைகள் உட்பட, சிரியாவில் செயல்பட்டுள்ள பல குழுக்களும் இப்படியான தாக்குதல்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் ட்ரோன்களை ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்பதுடன், அப்படியான அச்சுறுத்தலை ஐரோப்பிய நாடுகள் பல தற்போது எதிர்கொண்டும் வருகிறது.
அப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், பல நாடுகள் தங்கள் தொழில்நுட்ப திறனைப் பொறுத்து பல்வேறு நிலைகளுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளன.
இந்தியாவில் இப்படியான ஒரு நெருக்கடி இதுவரை ஏற்பட்டதில்லை என்பதால், அதற்கான தயாரெடுப்புகளை முடுக்கிவிட்டுள்ளனர் என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |