போரட்டத்தை முடக்க டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம்? காவல்துறை விளக்கம்
டெல்லியில் போரட்டத்தை முடக்க தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.
டெல்லி போராட்டம்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறது.

இரு நாட்களுக்கு முன்னர், போராட்டக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது, காவல்துறையினர் தடியடி நடத்தியதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் பரவி வருகிறது.
தேசிய பாதுகாப்பு சட்டம்(NSA)
இந்நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லியில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்த காவல் ஆணையருக்கு துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்கியதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியானது.
Centre has granted detention powers under the National Security Act (NSA), 1980, to Delhi Commissioner of Police.
— Sougat Chakraborty (@sougat18) July 23, 2026
Under the NSA, individuals can be detained without formal charges for a period ranging from 12 days to a maximum of 12 months.
The order authorises the Delhi… pic.twitter.com/2la3nORjpX
இது தொடர்பாக வெளியான அரசாணையில், இந்த சட்டத்தை ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18,2026 வரையிலான 3 மாதக் காலத்துக்கு அமல்படுத்துவதற்கான அதிகாரம் காவல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்ட 1980ன் படி, தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980-ன் கீழ், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தனி நபர்களை, காரணம் கூறாமல் 3 மாதங்கள் வரை சிறையில் அடைக்கலாம். அதிகபட்சமாக ஒரு ஆண்டு வரை நீட்டிக்கப்படலாம்.
இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், உடனடியாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை அடையாளம் காணும் எவரையும் முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வழிவகுக்கிறது.
டெல்லி காவல்துறை விளக்கம்
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள டெல்லி காவல்துறை, "வழக்கமாக நீட்டிக்கப்படும் இந்த நிர்வாக நடைமுறை டெல்லியில் நடைபெற்று வரும் CJP போராட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டு தவறான தகவல் பரப்பப்படுகிறது.
A routine quarterly renewal of powers under the National Security Act (NSA) has been falsely linked to the ongoing CJP protests.
— Delhi Police (@DelhiPolice) July 23, 2026
The renewal predates the protests and is part of the standard administrative process.
Citizens are advised to rely only on official information and… pic.twitter.com/t50ABgZBh0
இது ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை நீட்டிக்கப்படும் நிர்வாக நடைமுறையே. இந்த உத்தரவு, CJP போராட்டம் தொடங்கும் முன்னர் ஜூலை 7 ஆம் திகதியே பிறப்பிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |