குழந்தைகளை கடத்தி லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றுவந்த கும்பல் கைது
இந்தியாவின் டெல்லியில், குழந்தைகளை கடத்தி 2 முதல் 5 லட்ச ரூபாய்க்கு விற்றுவந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல்
கடந்த மாதம், அதாவது, ஆகத்து மாதம் 22ஆம் திகதி, உத்தரப்பிரதேசத்தில் செங்கல் செய்யும் வேலை செய்துவரும் ஒருவரின் ஆறு மாதக் குழந்தை கடத்தப்பட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டது.
அது தொடர்பில் கிடைத்த துப்பை வைத்து பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில், குழந்தை கடத்தும் கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அவர்களால் கடத்தப்பட்ட ஆறு குழந்தைகள் டெல்லி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
அந்த செங்கல் தொழிலாளியின் குழந்தை, ஆக்ராவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் உரிமையாளருக்கு 1.5 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டிருந்தது.
அந்தக் குழந்தையையும் மேலும் ஐந்து குழந்தைகளையும் மீட்டுள்ள பொலிசார், அந்த செங்கல் தொழிலாளியின் குழந்தையை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மற்றக் குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும்வரை அவை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், இந்த கடத்தல் கும்பல், ஆண் குழந்தைகளாகப் பார்த்து கடத்தி, பிள்ளை இல்லாத தம்பதியருக்கு அந்தக் குழந்தைகளை 2 முதல் 5 லட்ச ரூபாய்க்கு விற்றுவந்துள்ளது.
இன்னொரு விடயம், அந்தக் குழந்தைகளை வாங்கிய பெற்றோரும், அவை முறைப்படி தங்களுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக நம்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். விசாரணை தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |