ஆக்ஷன் திரைப்பட பாணியில் திருடர்களை பிடித்த பெண் பொலிஸ்! டெல்லியில் நடந்த அசரவைக்கும் சம்பவம்

Action Saroj Singh Sub Inspector Delhi Police Chain Snatcher
By Ragavan Nov 14, 2021 10:54 PM GMT
Report

இந்திய தலைநகர் டெல்லியில் ஆக்ஷன் திரைப்படத்துக்கு இணையாக, பெண் பொலிஸார் ஒருவர் பக்கா பிளான் போட்டு திருடர்களை சுட்டு பிடித்த சம்பவம் அசரவைக்கிறது.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு டெல்லியின் துவாரகா மற்றும் அண்டை பகுதிகளில் கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய கவலையாக வெளிப்பட்டது.

டெல்லி மற்றும் அண்டை மாநிலமான குர்கானில் 60-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் பதியப்பட்டன. பைக்கில் வரும் திருடர்கள் அப்பகுதியில் உள்ள பெண்களை குறிவைத்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடிப்பதாய் தொழிலாக வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்ஷன் திரைப்பட பாணியில் திருடர்களை பிடித்த பெண் பொலிஸ்! டெல்லியில் நடந்த அசரவைக்கும் சம்பவம் | Delhi Police Saroj Singh Catch Snatcher Film StylePicture: NDTV

குற்றம் சாட்டப்பட்ட கொள்ளையர்களில் ஒருவரை 'அர்மான்' என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரை கையும் களவுமாக பிடிக்க, டெல்லி காவல்துறை "ஹம் பீ ஹைன் (நாங்களும் இருக்கிறோம்)" என்ற திட்டத்தை மேற்கொண்டது.

மேலும், திருடனைப் பிடிக்கும் பொறுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் சிங் எனும் ஒரு பெண் காவலரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அர்மான் சனிக்கிழமையன்று துவாரகாவின் செக்டார் 13-ல் இருப்பார் என்ற தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சரோஜ் சிங்கிடம் கனமான தங்கச் சங்கிலியை அணிந்து கொண்டு அக்கம் பக்கத்தில் உலா வரச் சொன்னார்கள். மற்ற குழுவினர் மறைந்தனர்.

அர்மான், தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது சரோஜ் சிங்கிடம் நெருங்கியதும், அவர் தப்பிக்கும் முயற்சியைத் தடுக்க மறைந்திருந்த பொலிஸார் வெளியே வந்தனர்.

ஆக்ஷன் திரைப்பட பாணியில் திருடர்களை பிடித்த பெண் பொலிஸ்! டெல்லியில் நடந்த அசரவைக்கும் சம்பவம் | Delhi Police Saroj Singh Catch Snatcher Film StylePicture: NDTV

அப்போது குற்றம் அர்மான் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார். அந்த நேரத்தில், சரோஜ் சிங் தனது கைத்துப்பாக்கியை எடுத்து, திருடனின் காலில் சுட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார் என காவல்துறை அதிகாரி சங்கர் சவுத்ரி கூறினார்.

22 வயதான அர்மான் வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் வசிக்கிறார், மேலும் அவர் மீது அண்டை மாநிலமான குர்கானில் 25 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் துவாரகா மாவட்டத்தில் 36 திருட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US