திருடப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான இரண்டு தங்கக் கலசங்கள்: டெல்லி செங்கோட்டையில் பரபரப்பு
டெல்லியில் ரூ 1.5 கோடி மதிப்பிலான தங்க கலசங்கள் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட தங்க கலசங்கள்
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் நடைபெற்ற சமண சமய திருவிழாவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான இரண்டு தங்க கலசங்கள்(Golden Kalash) மற்றும் சில விலைமதிப்பற்ற பொருட்கள் திருடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Watch | Golden 'Kalash' Worth A Crore Stolen From Red Fort Jain Event, CCTV Showshttps://t.co/3omYSeR0BH pic.twitter.com/lQtV31CliB
— NDTV (@ndtv) September 6, 2025
திருடப்பட்ட பொருட்கள் அனைத்தும் சமண சமய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட புனிதமான பொருட்கள் ஆகும்.
திருட்டு சம்பவம் நடைபெற்ற புதன்கிழமை அன்று, விழா ஏற்பாட்டாளர்கள் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிடைத்துள்ள சிசிடிவி காட்சிகளில், சமண துறவி வேடமணிந்த திருடன் ஒரு நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர், மேலும் அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் சந்தேக நபர் இதற்கு முன்பு 3 கோயில்களில் இதே போல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
விலைமதிப்பற்ற பொருட்கள்
தஸ்லக்ஷண் மகபர் என்ற 10 நாள் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட இந்த பொருட்களில் 760 கிராம் தங்க கலசம், தங்கத் தேங்காய், மேலும் வைரம், மரகதம், மற்றும் மாணிக்கம் பதிக்கப்பட்ட சிறிய தங்க கலசம் ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவருக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
சமண சமய திருவிழாவில் ஆகஸ்ட் 15ம் திகதி செங்கோட்டை பூங்காவில் தொடங்கி செப்டம்பர் 9ம் திகதி வரை நடைபெறுகிறது, இதில் லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |