டெல்லியில் 3 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 27 பேர் உயிரிழந்த சோகம்; பலர் காயம்
இந்திய தலைநகர் டெலல்லியில், முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணி அளவில் ஏற்பட்ட இந்த பயங்கர தீவிபத்தை சுமார் 24 தீயணைப்பு குழுவினர் போராடி அணைத்து வருகின்றனர்.
மூன்று மாடி கொண்ட வணிக வளாக கட்டிடத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் முழு தளத்திலும் இன்னும் முழுமையாக மீட்பு பணிகள் முடியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு துறை அச்சம் தெரிவித்துள்ளது.
It's sad to hear the fire accident at building in Mundka in Delhi today.
— KrishRajMurari (@KrishRajMurari) May 13, 2022
Heartfelt Condolences to the Families who lost Precious lives of their kins ??
Wishing a speedy recovery to the wounded. #DelhiFire #FireAccident pic.twitter.com/8kudkrU4tX
40-க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அவரது அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.