பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ்! மழையால் கைவிடப்பட்ட டெல்லி vs ஹைதராபாத் போட்டி
மழை குறுக்கீடு காரணமாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான போட்டி கைவிடப்பட்டது.
இலக்கை நிர்ணயித்த டெல்லி
நடப்பு ஐபிஎல் 2025 தொடரின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் போதிய போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கிற்காக களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான கருண் நாயர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த டுபிளெசிஸ் வெறும் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
மத்திய வரிசையில் களமிறங்கிய அபிஷேக் பொரெல் (8), கே.எல்.ராகுல் (10), அக்சர் படேல் (6) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி 41 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதனால் இறுதியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 133 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ்!
டெல்லி அணியின் இன்னிங்ஸ் முடிந்தவுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.
மழை தீவிரமடைந்ததால் ஆட்டம் தொடர்ந்து தாமதமானது. நீண்ட நேரம் மழை விடாமல் பெய்த காரணத்தினால், போட்டி அதிகாரப்பூர்வமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்த முடிவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஏற்கனவே புள்ளிப்பட்டியலில் பின் தங்கியிருந்த ஹைதராபாத் அணிக்கு, இந்த ஒரு புள்ளி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போதுமானதாக இல்லை.
இதன் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஐபிஎல் 2025 பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
அதே நேரத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |