மனைவியைக் காணாமல் தேடிய கணவர்: வீட்டுக்குள் கண்ட அதிரவைத்த காட்சி
இந்தியாவின் தென்கிழக்கு டெல்லியில், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒருவர், தன் மனைவி பிள்ளைகளைக் காணாமல் அவர்களைத் தேடியுள்ளார்.
மனைவியைக் காணாமல் தேடிய கணவர்
டெல்லியிலுள்ள Okhla என்னுமிடத்தில் வேலைக்குச் சென்றிருந்த சுதர்ஷன் என்பவர், இரவு வீட்டுக்குத் திரும்பிய நிலையில், வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு தன் மனைவி பிள்ளைகளைத் தேடியுள்ளார்.

உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேடிய நிலையில், அவரது பிள்ளைகளில் ஒரு மகள் தவிர்த்து மற்ற பிள்ளைகள் அழுதுகொண்டே வீட்டுக்கு வர, அக்கம்பக்கத்திலுள்ள எல்லாரும் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்கள்.
வீட்டுக்குள், கட்டிலுக்கு அடியில் பொருட்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டி சற்று திறந்திருப்பதை கவனித்தவர்கள் அருகில் சென்று பார்க்க, அந்தப் பெட்டிக்குள், சுதர்ஷனின் மனைவியான ஜோதி (35) மற்றும் அவரது ஆறு வயது மகள் ஆகிய இருவரின் உடல்களும் மறைத்துவைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ஜோதிக்கும் பக்கத்து வீட்டிலுள்ள தீன் தயாள் (35) என்னும் நபருக்கும் தவறான உறவு இருந்ததாக தகவல் கிடைக்க, பொலிசார் அவரைத் தேடிச் சென்றுள்ளார்கள்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |