போட்டியில் தோத்தது மட்டுமில்லாம இப்படியா மோசமான சாதனையை படைப்பது? ஐபிஎல் தொடரில் விமர்சனத்துக்கு உள்ளான அணி
ஐபிஎல் தொடரில் 41வது போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்ற டெல்லி அணி ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 41-ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டெல்லி அணியை கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக எந்த ஒரு கட்டத்திலும் ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தனர்.
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 39 ரன்கள் குவித்தனர். மேலும் இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக 14 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதே தவிர ஒரே ஒரு சிக்ஸர் கூட செல்லவில்லை.
இந்த போட்டியின் மூலம் டெல்லி அணி படு மோசமான ஒரு சாதனையை ஐ.பி.எல் வரலாற்றில் படைத்துள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் ஷார்ஜா மைதானத்தில் எளிதில் சிக்சர்கள் பறக்கும் என்றே அனைவரும் நினைத்தனர்.
ஆனால் இந்த போட்டியில் விளையாடிய டெல்லி அணி வீரர்கள் இறுதி வரை எவ்வளவோ முயன்றும் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி இதுவரை சிக்ஸர் அடிக்காத இரண்டாவது போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.