வாழ்க்கை இப்படியே போய்விடுமா என சலித்து கொண்ட லண்டன் இளைஞருக்கு அடித்த அதிர்ஷ்டம்! பல கோடி பணம்
பிரித்தானியாவில் வசித்த டெலிவரி பாய் பணிசெய்யும் நபர் இளம் வயதில் பெரிய கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
லண்டனை சேர்ந்தவர் கைப் பத்தி (28). இவர் கடந்த 2017ல் தனது படிப்பை முடித்துவிட்டு அமேசனில் டெலிவரி பாய் பணியில் ஈடுபட்டு வந்தார். அதில் அவருக்கு பெரிதாக வருமானம் வராத நிலையில் வாழ்க்கை இப்படியே போய் விடுமா என நினைத்து கவலைப்பட்டார்.
அப்போது தான் சேமித்து வைத்திருந்த ரூ. 66 ஆயிரம் பணத்தை வைத்து கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார். அவர் வாங்கிய காயின் விலை ஏற்றத்தை கண்ட நிலையில் ரூ. 28 லட்சம் வரை பணத்தை ஈட்டினார்.
Kaif Bhatty
இதன்பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்தார், தொடர்ந்து கைப்புக்கு கிரிப்டோவில் வருமானம் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒருகட்டத்தில் ரூ. 5 கோடிக்கு மேல் கிடைத்தது.
இதையடுத்து தற்போது கைப் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளார். தனது கனவு வாழ்க்கையை அங்கு வாழும் அவர் ரூ 2 கோடிக்கு புதிய கார் வாங்கியுள்ளார். கைப் கூறுகையில், நான் என் வேலையை ராஜினிமானா செய்யும் முடிவை முதலில் என் பெற்றோர் ஏற்கவில்லை.
ஆனால் நான் சாதித்து காட்டினேன். இப்போது நான் இளம் வயதில் இவ்வளவு சாதித்துள்ளேன் என என் பெற்றோர் பெரும் கொள்கின்றனர் என கூறியுள்ளார்.
Kaif Bhatty/instagram