பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்.., அதிர்ச்சி வீடியோ
சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே டெலிவரி ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெலிவரி ஊழியர் மரணம்
இந்திய மாநிலமான அரியானா, பரிதாபாத்தின் சத்புரா கிராமத்தில் வசித்து வந்த டெலிவரி ஊழியர் விகல் சிங். இவர் கடந்த ஒரு வருடமாக ஓன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் தனது சக ஊழியர்களுடன் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சரிந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அவரை மற்ற ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். தற்போது இவர் மாரடைப்பால் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டெலிவரி ஊழியரின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு ஊர் மக்கள் போராட்டம் மேற்கொண்டதால் இறந்தவரின் டும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது. மேலும், இறுதி சடங்கிற்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது.
फरीदाबाद में डिलीवरी एजेंट को आया हार्ट अटैक मौके पर मौत pic.twitter.com/g80V0Qh0Wc
— Priya singh (@priyarajputlive) August 1, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |