கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம்: ரொறன்ரோ விமான விபத்து தொடர்பில் வெளியான வீடியோ!
கனடாவின் ரொறன்ரோவில் தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் விபத்து காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தலைகீழாக கவிழ்ந்த விமானம்
ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில்(Toronto Pearson Airport) திங்கட்கிழமை பிற்பகலில் என்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 4819 தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்து பெரும் விபத்தில் சிக்கியது.
பனிமூடிய ஓடுபாதையில் தரையிறங்கியபோது, மிட்சுபிஷி CRJ-900LR ரக விமானம்(Mitsubishi CRJ-900LR) தலைகீழாக கவிழ்ந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினியாபோலிஸிலிருந்து (Minneapolis) புறப்பட்ட இந்த விமானத்தில் 76 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
இந்த விபத்தின் தன்மை மிகவும் தீவிரமாக இருந்தபோதிலும், விமானத்தில் இருந்த 80 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
முதலில் 19 பேர் காயமடைந்ததாகவும், 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், பின்னர் வெளியான தகவல்களின்படி, காயமடைந்த அனைவருக்கும் சிறிய காயங்களே ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Departures and arrivals have resumed at Toronto Pearson as of 5 p.m. All 76 passengers and four crew from Delta flight 4819 were accounted for. A number of passengers were taken to local hospitals. GTAA staff are supporting families of passengers at arrivals.
— Toronto Pearson (@TorontoPearson) February 17, 2025
இணையத்தில் வெளியான வீடியோ
உள்ளூர் நேரப்படி சுமார் 2:15 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
இதன் காரணமாக ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் சுமார் இரண்டரை மணி நேரம் விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் தடை விதிக்கப்பட்டது.
BREAKING🚨: New footage shows the moment a Delta Airlines jet crashed at Toronto Pearson Airport. 75 passengers on board, 18 injured.😳 pic.twitter.com/Uoe8u8iexs
— Mario 🇺🇸🇵🇱🇺🇦🇪🇺 (@PawlowskiMario) February 18, 2025
சம்பவ இடத்திலிருந்து வெளியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் விமானம் ஓடுபாதையில் தலைகீழாக கவிழ்ந்திருப்பதையும், அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததையும் காட்டுகின்றன.
இந்த விபத்துக்கான காரணம் கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
‼️ Plane overturns during landing at Toronto International Airport
— NEXTA (@nexta_tv) February 18, 2025
A Delta Airlines aircraft flipped over upon landing at Toronto International Airport, according to eyewitness videos.
After the hard landing, passengers helped each other exit the cabin before emergency services… pic.twitter.com/MOOE7g8ufU
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |