உயிரை பறிக்கும் புதிய டெல்டா பிளஸ் கொரோனாவின் அறிகுறிகள் என்னென்ன? எப்படி தடுக்கலாம்?
கொரோனா வைரஸ் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொண்டே வருகிறது. அதில் ஒன்று தான் இந்த டெல்டா வைரஸ்.
இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது.
நாடுமுழுவதும் 11 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை உயிரை பறிக்கும் சக்தி கொண்டால் இதனை முன்கூட்டியே விரட்டுவது நல்லது. இதன் அறிகுறிகள் என்ன? என்ன மாதிரியான முன்னேச்சரிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
டெல்டா பரவல் ஏற்படக் காரணங்கள்
இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருக்கமான தொடர்பு, இருமல், தும்மல் போன்ற நீர்த்துளிகளால் காற்றில் பரவி மற்றவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். டெல்டா மாறுபாடு காற்றில் வேகமாக பரவக் கூடியது.
கொரோனா வைரஸ் அதன் ஸ்பைக் புரதம் காரணமாக நம் உடலில் வேகமாக பரவுகிறது. அதே மாதிரி வீட்டை விட்டு வெளியே செல்வது, பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்திய பொருளை தொடுவது போன்றவையும் உங்களுக்கு கொரோனா பாதிப்பை ஏற்படுத்தலாம்
அறிகுறிகள்
- உலர்ந்த இருமல்
- சோர்வு அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறி
- கடுமையான அறிகுறிகளான மூச்சுத் திணறல் அல்லது வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
- சரும அரிப்பு
- கால்விரல்களின் நிறத்தில் மாற்றம்
- தொண்டை வலி
- மூச்சுத் திணறல்,
- வாசனை இழப்பு
- வயிற்றுப்போக்கு,
- தலைவலி அல்லது மூக்கு ஒழுகுதல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்.
- எங்கு சென்றாலும் அல்லது மக்களை சந்திக்கும் போது 6 அடி இடைவெளியை கடைபிடியுங்கள்
- .வெளியே சென்று விட்டு வந்தால் மறக்காமல் சானிட்டைசரை அப்ளே செய்யுங்கள்.
-
வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை, சுத்தப்படுத்தவும் கிருமி நீக்கம் செய்யவும் செய்யுங்கள் .
-
உங்க கைகளை சோப்பைக் கொண்டு ஒரு நாளைக்கு 20 விநாடிகள் என பலமுறை கழுவுங்கள்.
-
ஒருவேளை வீட்டை விட்டு வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை மாஸ்க்களை பயன்படுத்துங்கள்.
- வெளியில் இருந்து வாங்கிட்டு வந்த எந்தவொரு பொருளையும் கழுவி கிருமி நீக்கம் செய்த பிறகே பயன்படுத்துங்கள்.
- சீக்கிரமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.