காலைக்கடன் கழிக்கிறீர்களா? அதை வீணாக்காமல் அனுப்பிவையுங்கள்: 100,000 பிரான்ஸ் நாட்டவர்களுக்கு கோரிக்கை
மனித உடலில் உள்ள கிருமிகள் எல்லாமே நோய் உண்டாக்குபவை அல்ல.
மலத்தில் இருக்கும் கிருமிகளும் பல்வேறு ஆய்வுகளுக்கு உதவுகின்றன.
பிரான்ஸ் நாட்டவர்கள், தாங்கள் காலைக்கடன் கழிக்கும்போது, தங்கள் மலத்தை வீணாக்காமல் தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஒரு காலத்தில், மனித மலத்திலிருந்து போலியோ வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டு, அது போலியோ தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
மனித உடலில் பலவகை கிருமிகள் உள்ளன. அவை எல்லாமே நோய் உண்டாக்குபவை அல்ல. சொல்லப்போனால், உடலுக்கு நன்மை தரும் நோய்க்கிருமிகள் நம் உடலிலேயே, உள்ளேயும் வெளியேயும் ஏராளம் உள்ளன.
சரி,விடயத்துக்கு வருவோம்...
அதாவது, 100,000 பிரான்ஸ் நாட்டவர்கள் இதுபோல் தங்கள் மலத்தை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
எதற்கென்றால், மனிதனுடைய குடலுக்குள்ளிருக்கும் பாக்டீரியா, மனித உடல் நலன் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காகத்தான் பிரான்ஸ் முழுவதிலும் வாழ்பவர்களிலிருந்து 100,000 தன்னார்வலர்கள் தங்கள் மலத்தை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
Le French Gut என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, இந்த ஆண்டு இறுதிக்குள் 3,000 தன்னார்வலர்களிடமிருந்தும், 2027ஆம் ஆண்டுவாக்கில் 100,000 தன்னார்வலர்களிடமிருந்தும் மாதிரிகளை சேகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
வயிற்றுக்குள்ளிருக்கும் பாக்டீரியாவுக்கும், புற்றுநோய், நீரிழிவு, உடல் பருமன், குடல் பிரச்சினைகள், ஆட்டிசம், பார்க்கின்சன் மற்றும் அல்ஸீமர் ஆகிய பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்து, அந்த பிரச்சினைகளுக்கான சிகிச்சையைக் கண்டறிவதுதான் இந்த ஆய்வின் நோக்கம் ஆகும்.