டன் கணக்கில் தலைமுடி ஏற்றுமதி; முதலிடத்தில் இந்தியா
நம் தலையில் முடி இருக்கும் வரை அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோம்..ஆனால் அதை சலூனில் வெட்டிவிட்டால் அது நமக்கு வீண் விரயத்திற்கு சமம் என நினைக்கிறோம். ஆனால், நாம் வீண் அனா நினைக்கும் நம் தலைமுடியை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் நடக்கிறது தெரியுமா?
இந்திய தலைமுடிக்கு உலகில் நல்ல கிராக்கி உள்ளது. உலகில் அதிகமாக முடி வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கேட்பதற்கு புதிதாய் சுவாரஸ்யமாக உள்ளதல்லவா...
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முடியை என்ன செய்கிறார்கள்... முழு விவரம் உங்களுக்காக.
தலைமுடியின் மூலம் கோடிக்கணக்கான வருமானம் கிடைக்கிறது. ஆம் நீங்கள் கேட்பது உண்மைதான். நம் நாட்டில் தலைமுடியில் கோடிகளில் வியாபாரம் நடக்கிறது. சலூன்,கோவில்களில் விடப்படும் முடிகள் தனியார் நிறுவனங்களை வைத்து வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் முடிகள் விக் தயாரிப்பதற்கும், சில மருந்து வகைகளுக்கும், இன்னும் பல பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
சாக்லேட், பாண் போன்ற உணவுப் பொருள்களில் L-cysteine மனித தலைமுடிகளில் இருந்து தயாரிக்க முடியும் என்ற தகவல்கள் சமீபத்தில் கேள்விப்பட்டிருப்போம்.
உலக அளவில் முடி ஏற்றுமதியில் (2,27,372 Shipment) இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் கூந்தல் மிகவும் விரும்பப்படுகிறது. இந்தியாவில் கிடைக்கும் முடி உயர் தரம் வாய்ந்ததாக இருப்பதால் பல நாடுகளில் இந்திய முடிக்கு கிராக்கி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் தலைமுடியில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் (2018-19 மற்றும் 2022-23 க்கு இடையில்) மனித முடிகளின் ஏற்றுமதி 391 சதவீதம் அதிகரித்து 169.23 மில்லியன் டாலராக (₹1,400 கோடிக்கு மேல்) உள்ளது. இதை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதேபோல், பதப்படுத்தப்பட்ட மனித முடி ஏற்றுமதியும் 2019-20ல் ரூ.2,288 கோடியாக இருந்த ரூ.2,300 கோடி அதிகரித்து 2022-23ல் ரூ.4,535 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஏற்றுமதி செய்யப்படும் முடியை இறக்குமதி செய்கின்றன... இதில், இந்தோனேசியா 31 சதவீத முடியை இறக்குமதி செய்கிறது. பின்னர் ஆஸ்திரியா 16.5 சதவீதம், மியான்மர் 14.6 சதவீதம், வியட்நாம் மற்றும் இத்தாலி ஆகியவை முடியை இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டில் இருந்து அதிகளவில் முடி ஏற்றுமதி செய்யப்படும் மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் முடி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
India Hair Export, huge demand for Indian hair in the world, Human hair export, India exports Human Hair, human Hair Waste