இலங்கை வீரரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி! கோடிகளை கொட்டி எடுக்க முயலும் அணி
ஐபிஎல் ஏலத்தில் இலங்கையின் இளம் வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ 10 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி நடைபெறுகிறது.
ஐபிஎல் 2022 ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல வீரர்களை ஐபிஎல் அணிகள் தங்கள் அணிக்கு எடுத்து வருகின்றது.
அந்த வகையில் தனது தொடர் சிறப்பான செயல்பாட்டால் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. அவரை தட்டி தூக்க் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முயன்று வருகிறது.
ரூ 10 கோடிக்கு மேல் அவர் விலைக்கு கேட்கப்பட்டு வருகிறார். இதன் மூலம் 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ 10 கோடியை ஏலத்தில் தாண்டிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெயரை ஹசரங்கா பெற்றுள்ளார்.
தற்போது ஏலம் எடுக்கும் நிகழ்ச்சிக்கு இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் சிறிது நேரத்தில் மீண்டும் தொடங்கும் போது அவர் எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டார் என்ற விபரம் வெகுவிரைவில் தெரியவரும்