ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் பிரதமரை தேர்வு செய்ய கோரிக்கை: பிரான்ஸ் ஜனாதிபதி மறுப்பு
ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைவதற்கு முன் புதிய அரசை அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.
இடதுசாரிக் கூட்டணியின் கோரிக்கை
இடதுசாரிக் கூட்டணியினர், யாரென்றே பலருக்கும் தெரியாத Lucie Castets என்னும் பெண்ணை பிரதமராக முன்னிறுத்த முயற்சி செய்தார்கள்.
அவர்களுடைய கோரிக்கையை மேக்ரான் நிராகரித்துவிட்டார்.
ஆகத்து மாதத்தின் நடுப்பகுதிவரை, எந்த மாற்றத்தையும் செய்யும் நிலையில் நாம் இல்லை என்று கூறிய மேக்ரான், அப்படி ஏதாவது மாற்றம் செய்தால், அதனால் பெரும் பிரச்சினைகள் வெடிக்கலாம் என்றார்.
நாளை, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், துவக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |