கொரோனா தடுப்பூசி... சுவிட்சர்லாந்தில் இழப்பீடு கேட்டு முறையிட்ட 90 பேர்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் காரணமாக 90 பேர் இழப்பீடு கேட்டு சுகாதாரத்துறையிடம் முறையிட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 28ம் திகதி வரையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 90 பேர்களே இழப்பீடு கேட்டு முறையிட்டவர்கள்.
ஆனால், இழப்பீடுக்கான முறையான தேவைகளை பூர்த்தி செய்யாததால் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சுவிஸ் நிர்வாகத்தை பொறுத்தமட்டில், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இழப்பீடு கேட்டு முறையிடலாம் என்றே சட்டத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் தற்போது முறையிட்டுள்ள 90 பேர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தக்கவைப்புச் செலவுகளை மத்திய அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினார்.
சட்டத்தில் இதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்படுகிறது. பொதுவான பக்கவிளைவுகளுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என்றே கூறப்படுகிறது