பிரித்தானியாவில் நான்கு கைகளுடன் பறக்கும் தட்டில் பறந்த வினோத உயிரினம்? வெளியான பரபரப்பு வீடியோ
பிரித்தானியா வான்வெளியில் வினோத உயிரினம் பறக்கும் தட்டில் பறந்து சென்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள பெண் ஒருவரே குறித்து வீடியோவை பதிவு செய்து Reddit தளத்தில் வெளியிட்டுள்ளார்.
ErykahBeeh என்ற Reddit பயனர், தெற்கு லண்டனில் என்ன இருக்கிறது.. இது UFO வா? என்ற கேள்வியுடன் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
குறித்த வீடியோவில், கருப்பாக வினோத உயிரினம் ஒன்று பறக்கும் தட்டில் அசைந்த படி பறந்து செல்வது போல் தெரிகிறது.
அதற்கு நான்கு கைகள் இருப்பது போன்று தோன்றுகிறது.
இந்த வீடியோவை பார்த்து திகிலடைந்த பலர், இது ஹரி பாட்டர் படத்தில் வரும் Dementor கதாப்பாத்திரம் போல் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
பலர் இது Dementor மாதிரி இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
எனினும் சிலர், அது Dementor கிடையாது, அது குப்பை கவர் காற்றில் பறந்து வந்த வீடியோ தான் என தெரிவித்துள்ளனர்.