அமெரிக்காவில் நெருங்கும் இடைக்காலத் தேர்தல்கள்: கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன?
With five days to go before the United States midterms, Democrats are ahead in national polls: அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகிக்கிறார்கள்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள்
நவம்பர் மாதம் 3ஆம் திகதி, அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இந்த இடைக்காலத் தேர்தல் என்பது, அமெரிக்க ஜனாதிபதியின் நான்காண்டுகள் பதவிக்காலத்தின் இடையில், அதாவது, ஜனாதிபதி பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டு நடத்தப்படுகிறது.
இந்த தேர்தல்கள், அமெரிக்க நாடாளுமன்றத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு செய்யும் வகையிலான தேர்தல்கள் ஆகும்.
கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன?
ஆக, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும், நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையைப் பெறுவதற்காகப் போராடி வரும் நிலையில், தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

RealClearPolling என்னும் அமைப்பின் தேசியக் கருத்துக்கணிப்பு சராசரியின்படி, 51.4 சதவிகித ஆதரவுடன் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகிக்கிறார்கள். ட்ரம்பின் குடியரசுக் கட்சியினருக்கு 43.2 சதவிகித ஆதரவே உள்ளது.
விடயம் என்னவென்றால், தேசிய அளவிலான முன்னிலை, எல்லா செனட் தேர்தலிலும் பிரதிபலிப்பதில்லை என்கிறார்கள் வரலாற்றாளர்கள்!