10 மில்லியனா? வாய்ப்பே இல்லை: சுவிஸ் மக்கள்தொகை துறை நிபுணர்
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது எனக்கூறும் பிரேரணை ஒன்று அதிக அளவில் கவனம் ஈர்த்துவருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், சுவிஸ் மக்கள்தொகை 10 மில்லியனை எல்லாம் எட்டவே எட்டாது என்கிறார் துறைசார் நிபுணர் ஒருவர்.
புலம்பெயர்தல் எதிர்ப்பு பிரேரணை
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளது.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்வோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில், ஜூன் மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
10 மில்லியனா? வாய்ப்பே இல்லை இந்நிலையில், சுவிஸ் மக்கள்தொகை 10 மில்லியனை எட்டவே எட்டாது என்று கூறியுள்ளார் துறைசார் நிபுணர் ஒருவர்.
மக்கள்தொகை துறை நிபுணரான ஹெண்ட்ரிக் (Hendrik Budliger) என்பவர், ஐரோப்பாவில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இருக்கும் இளைஞர்களை, அதாவது, திறன்மிகுப் பணியாளர்களை தங்கள் நாட்டிலேயே தக்கவைத்துக்கொள்ள அக்கம்பக்கத்து நாடுகள் போராடிவருகின்றன என்கிறார்.

ஆக, பக்கத்து நாடுகளிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களை சுவிட்சர்லாந்து வேலைக்கு எடுப்பது கடினம் என்கிறார் அவர்.
அத்துடன், சுவிட்சர்லாந்தில் பிறப்பு வீதம் வரலாறு காணாத அளவில் குறைந்துகொண்டே வருவதால் சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 10 மில்லியனை எட்ட வாய்ப்பே இல்லை என்கிறார் ஹெண்ட்ரிக்.
ஆக, பணிக்கு ஆட்கள் கிடைப்பது சுவிட்சர்லாந்துக்கு நீண்ட கால பிரச்சினையாக இருக்கும் என்று கூறும் அவர், அப்போது புலம்பெயர்தல் எல்லாம் ஒரு பிரச்சினையாகவே தோன்றாது என்கிறார்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |