சுவிட்சர்லாந்தில் 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிப்பு
சுவிட்சர்லாந்தில், 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெடரல் சுகாதாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டைவிட அதிகம்
2022ஆம் ஆண்டு, 68 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு, இதுவரை 154 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெங்கு மற்றும் நுளம்புகள் மூலம் பரவும் மற்ற நோய்கள் அதிகரித்துவருவதற்குக் காரணம், கோவிட் காலகட்டத்துக்குப் பின் மீண்டும் வெளிநாட்டுப் பயணம் துவங்கியுள்ளதே என சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
புலிக் கொசுக்கள் காரணமா?
புலிக்கொசுக்கள் காணப்படுவதால் சுவிட்சர்லாந்தில் டெங்கு கொள்ளைநோய் பரவக்கூடும் என்று கூறிவிடமுடியாது என்று கூறியுள்ள பொது சுகாதார அலுவலகம், பாதிக்கப்பட்ட இடம் ஒன்றிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வரும் ஒருவரை கடித்த உள்ளூர் கொசு ஒன்று மற்றொருவரைக் கடித்தாலும் டெங்கு பரவமுடியும் என்று கூறியுள்ளது.
நோய் பரவும் நீண்ட கால அபாயமும், புலிக்கொசுக்கள் பயங்கரமாக எரிச்சலூட்டக்கூடியவை என்பதாலுமே கொசுக்கள் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது.
சுவிட்சர்லாந்தில் 2003ஆம் ஆண்டு முதன்முறையாக Ticino மாகாணத்தில் இந்த புலிக்கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பிரெஞ்சு மொழி பேசும் பல சுவிஸ் மாகாணங்களில் இந்த கொசுக்கள் கண்டறியப்பட்டு வருவதுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |