டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படுவது ஏன்?.., எச்சரிக்கை அறிகுறிகள் கூறும் மருத்துவர்
ஏடிஸ் கொசுக்களால் டெங்கு பரவுகிறது. கொசு கடித்த மூன்று முதல் 14 நாட்களுக்கு பின், டெங்கு தீவிரமடைந்து வெளியே தெரியும்.
விட்டு விட்டு காய்ச்சல், தொண்டை வலி, சளி, உடல் சோர்வு, வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வருவது, உதட்டில் சிறிய சிவப்பு கொப்பளங்கள் ஏற்படுவது, டெங்குவின் அறிகுறிகளாகும்.
டெங்கு காய்ச்சல் வந்தால் உயிரிழப்பு எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சை, இதனை தடுக்க எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்பதை பற்றி மருத்துவர் அருண்குமார் கூறியுள்ளார்.
மருத்துவர் கூறும் விளக்கம்
பொதுவாக டெங்கு காய்ச்சல் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
Group A: இந்த வகை டெங்கு பாதிப்பு பெரிதளவில் பாதிப்புகள் ஏதும் இருக்காது. இவர்களுக்கு நீர்ச்சத்து அதிகம் உள்ள இளநீர், தண்ணீர், ஜூஸ் மற்றும் காய்ச்சல் மாத்திரை போன்றவற்றை எடுத்துக்கொண்டாலே ஒரு 5- 6 நாட்களுக்குள் சரியாகிவிடும்.
Group B: இவர்களுக்கு டெங்கு பாதிப்பு கொஞ்சம் தீவிரமாக இருக்கும். தீவிர ரத்த அணுக்கள் குறைபாடு, தீவிர வாந்தி, தீவிர வயிற்று வலி போன்றவை இருக்கலாம். இவர்கள் அடுத்த கட்டத்திற்கு போக வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது மிகவும் அவசியம்.
Group C: இவர்களுக்கு டெங்கு பாதிப்பு தீவிரமாக இருக்கும், தீவிர இரத்த அழுத்த குறைபாடு, மூக்கில், வாயில் இரத்த கசிவு, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, மூளை பாதிப்பு, பாக்டீரியா தொற்றுகள் போன்றவை ஏற்படும். Group C டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட வேண்டும்.
டெங்குவிற்கான சிகிச்சை
ஆரம்ப நிலை டெங்குவிற்கு பப்பாளி, பப்பாளி இலை போன்ற இயற்கையான மூலிகைகளை உண்டு வருவதால் அதன் தொற்று குறையும்.
டெங்கு பாதிப்பின் போது இரத்த குழாய்களில் துளைகள் ஏற்பட்டு இரத்த குழாய்க்குள் இருக்கும் நீரானது வெளியேறி உடம்பு வீங்கியது போல தோன்றும்.
இதனால் இரத்த குழாய்களில் நீர்ச்சத்து இல்லாதால் அவர்களுக்கு நீர்ச்சத்து கொண்ட உணவு மிகவும் அவசியமான ஒன்று. மேலும், இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும், நுரையீரல், சிறுநீரகம் போன்றவை செயல்படுகிறதா என கண்காணிப்பது அவசியமாகும்.
Abu Sufian Jewel/UNB
அதேசமயம், இந்த நீர் அதிகமாகி நுரையீரலில் நீர்க்கட்டி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
குறிப்பாக, டெங்கு பாதிப்பில் காய்ச்சல் நின்ற பின்பு தான் இந்த தீவிர பாதிப்பு ஏற்படுகின்றன. இந்த பாதிப்பும் அதிகபட்சம் 48 மணி நேரம் தான் இருக்க கூடும்.
இந்த தீவிர சிகிச்சைக்கு சம அளவு IV Fluids, இரத்த அழுத்தம் அதிகரிக்க Ionotropes, மூச்சுத்திணறலுக்கு செயற்கை சுவாசம் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு Dialysis போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
உயிரிழப்பு ஏற்படுவது எதனால்?
தீவிர சிகிச்சை எவ்வளவுதான் கொடுத்தாலும் இந்த Group C- ஆல் பாதிக்கப்பட்ட 5% மக்களை காப்பாத்துவது என்பது மிகவும் கடினம்.
இவர்களுக்கு இந்த நீர் கசிவு என்பது தீவிரமாகிவிடுவதால் 5% மக்கள் இறந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.
இந்த டெங்கு பாதிப்பில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் இறப்பதற்கு காரணம், இரத்த அழுத்தம் குறைவும், மூச்சி திணறலும் குழந்தைகளும் ஏற்படும் வாய்ப்பு மிக மிக அதிகம்.
குழந்தைகள் தீவிரமாக பாதிக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை பயனளிக்காது. எனவே முன்கூட்டியே பாதுகாப்பு வசதி என்பது மிகவும் அவசியம்.
எச்சரிக்கை அறிகுறிகள்
- தீவிர வாந்தி
- தீவிர வயிற்றுவலி
- மூக்கில் இரத்த கசிவு
- பல் ஈறில் இரத்த கசிவு
- கண்கள் வீக்கம்
- வயிற்றில் வீக்கம்
- மூச்சுத்திணறல்
- வழக்கத்திற்கு மாறான உடல் சோர்வு
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களை ஆலோசனை மேற்கொள்வது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பற்ற உதவும்.
குறிப்பாக, சுத்தமான தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் முட்டையிடும், எனவே வீட்டை சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |