மோடி பிரச்சாரம் செய்த நிலையில் ராகுல் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு?
ஜார்கண்ட் மாநிலத்தில் மோடி பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் போது ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அனுமதி மறுக்கப்பட்டதிற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராகுலுக்கு மறுப்பு
இந்திய மாநிலமான ஜார்கண்டில், சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 13 -ம் திகதி நடந்து முடிந்த நிலையில்இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20 -ம் திகதி நடைபெற இருக்கிறது.
இதனால், அம்மாநிலத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.'
அந்தவகையில், காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம் செய்வதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகை தந்திருந்தார்.
அவர், பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டர் மூலம் கோடா பகுதியில் இருந்து கிளம்ப முற்பட்டார். ஆனால், அவரது ஹெலிகாப்டர் கிளம்ப வான் போக்குவரத்து கட்டுப்பாடு ATC அறையிலிருந்து ஏர் கிளியரன்ஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவர் செல்வதற்கு 45 நிமிடங்கள் தாமதம் ஆனது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்டின் தியோகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நேரத்தில் ராகுலின் பிரச்சாரத்தை சீர்குலைக்கவே பாஜக இதை செய்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |