ஜேர்மனி - டென்மார்க் பயண நேரத்தை 10 நிமிடமாக குறைக்கும் சுரங்க பாதை
ஜேர்மனி மற்றும் டென்மார்க்கை இணைக்கும் கடலுக்கு அடியிலான சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஃபெமார்ன்பெல்ட் சுரங்கம்
டென்மார்க்கின் லொலேண்ட் (Lolland) தீவையும் ஜேர்மனியின் ஃபெமார்ன் (Fehmarn) தீவையும் இணைக்கும் வகையில், பால்டிக் கடலுக்கு அடியில் 18 கிலோமீட்டர் நீளத்தில், இந்த சுரங்கப்பாதை அமைய உள்ளது.
இதன் கட்டுமான பணிகள் முடிந்து, இந்த ஆழ்கடல் சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, உலகின் நீளமான ஆழக்கடல் சுரங்கப்பாதை என்ற பெருமையை பெரும்.
மேலும், இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, டென்மார்க்கில் உள்ள ராட்பிஹாவ்ன்(Rødbyhavn) மற்றும் ஜேர்மனியில் உள்ள புட்கார்டன்(puttgarden) இடையே 10 நிமிடங்களில் காரிலிலும், 7 நிமிடங்களில் ரயிலிலும் சென்றடைய முடியும்.
2021 ஆம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட இந்த ஃபெமார்ன்பெல்ட் சுரங்கம் (Fehmarnbelt tunnel), 2029 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மொத்த செலவு 7.4 பில்லியன் பவுண்டுகள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பெரும்பங்கு நிதியை டென்மார்க் வழங்கியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஆணையத்திடமிருந்து 1.3 பில்லியன் பவுண்டுகள் பெறப்பட்டுள்ளது.
இது டென்மார்க்கை ஜேர்மனியுடன் இணைப்பது மட்டுமல்லாமல், ஸ்காண்டிநேவியாவை மத்திய ஐரோப்பாவுடன் இணைப்பதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |