பல் மருத்துவர்... இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி: இவரது சொத்து மதிப்பு
அதானி அறக்கட்டளையின் தலைவரும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டவர் பிரிதி அதானி.
சமூக பங்களிப்பை
இந்தியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான அதானி அறக்கட்டளையை முன்னெடுத்து நடத்தி வருகிறார். நாடு முழுவதும் உள்ள சமூக மக்களுக்கு பிரிதி அதானி குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார்.
அவரது சமூக பங்களிப்பை கருத்தில் கொண்டு 2020ல் குஜராத் லா சொசைட்டி பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1965ல் குஜராத் குடும்பம் ஒன்றில் பிறந்த பிரிதி அதானி, தொழிலதிபர் கௌதம் அதானியை 1986ல் திருமணம் செய்தார்.
அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் பெற்றதை அடுத்து அவர் தகுதிவாய்ந்த பல் மருத்துவராக மாறினார்.
பிரிதி - அதானி தம்பதிக்கு இரு பிள்ளைகள். அதானி துறைமுகங்களின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார் கரண் அதானி. இன்னொருவர் ஜீத் அதானி.
நாளுக்கு ரூ 3 கோடி செலவிட்டால்... முகேஷ் அம்பானி சம்பாதித்தது மொத்தம் எத்தனை ஆண்டுகளில் தீர்ந்து போகும்?
1996ல் தான் அதானி அறக்கட்டளையை பிரிதி அதானி துவங்கியுள்ளார். கல்வி, பொது சுகாதாரம், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஆகியவற்றில் அதானி அறக்கட்டளை கவனம் செலுத்துகிறது.
10ம் வகுப்பு கூட தேறாத
இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் 5,700க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதானி அறக்கட்டளை செயல்படுகிறது. தனது இதுவரையான வெற்றிக்கு காரணம் பிரிதி என அதானி பெருமையாக கூறுவார்.
மட்டுமின்றி தன்னைவிட அதிக கல்வித் தகுதி இருந்தும் அவரை திருமணம் செய்ததற்காக தமது மனைவியை பாராட்டுவதையும் அதானி வழக்கமாக கொண்டுள்ளார்.
10ம் வகுப்பு கூட தேறாத தம்மை, பயிற்சி பெற்ற மருத்துவராக இருந்தும் திருமணம் செய்துகொள்ளும் துணிச்சலான முடிவை எடுத்தவர் பிரிதி என அதானி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். வெளியான தரவுகளின் அடிப்படையில் பிரிதியின் சொத்து மதிப்பு ரூ 8,000 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |