நாட்டுக்கே அவமானம்... கனடாவைத் தொடர்ந்து பிரான்சும் நடிகர் மீது நடவடிக்கை எடுக்க திட்டம்
பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர் மீது பல பெண்கள் புகாரளித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், கனேடிய மாகாணம் ஒன்று அவருக்கு வழங்கிய உயரிய விருதொன்றை அதிரடியாக திரும்பப் பெற்றது.
தற்போது, அவருக்கு வழங்கப்பட்ட உயரிய விருதைத் திரும்பப் பெற பிரான்சும் திட்டமிட்டு வருகிறது.
பெண்களை மோசமாக விமர்சித்த நடிகர்
பிரபல பிரெஞ்சு நடிகரான Gérard Depardieu தங்களிடம் தவறாக நடந்துகொடதாக, நடிகைகள் உட்பட 13 பெண்கள் புகாரளித்துள்ளார்கள். அவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், Gérardஆல் பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான Emmanuelle Debever என்னும் பெண், ஒரு வாரம் முன்பு பாரீஸிலுள்ள நதி ஒன்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.
Emmanuelle தற்கொலை செய்துகொண்ட அதே நாளில், பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படம் ஒன்று வெளியானது. அது, Gérard மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய ஆவணப்படமாகும்.
அந்த படத்தில், வடகொரியாவுக்குக் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த Gérard, பெண்கள் முன்பாகவே ஆபாசமாக ஒலி எழுப்பியதுடன், 10 வயது சிறுமி உட்பட குதிரை ஓட்டும் பெண்களைக் குறித்து மோசமாக விமர்சித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதுடன், புகைப்படம் எடுக்கும்போதே, தான் தன் அருகே நிற்கும் ஒரு வடகொரிய பெண்ணின் பின்பக்கங்களைத் தொட்டுக்கொண்டிருப்பதாகவும் Gérard கூற, அதுவும் அதே வீடியோவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.
நாட்டுக்கே அவமானம்
இந்நிலையில், Gérardஇன் நடத்தையால் பிரான்ஸ் நாட்டுக்கே அவமானம் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சரான ரீமா (Rima Abdul-Malak).
1996ஆம் ஆண்டு Gérardக்கு பிரான்சின் உயரிய விருதான Legion of Honour என்னும் விருது அப்போதைய ஜனாதிபதி Jacques Chiracஆல் வழங்கப்பட்டது.
Valery HACHE / AFP/File
தற்போது, Gérard மீதான ஒழுங்கு நடவடிக்கையாக, அந்த விருது பறிக்கப்படலாம் என்று கூறியுள்ள அமைச்சர் ரீமா, Legion of Honour என்னும் விருது, ஒரு தனித்துவமான மனிதருக்கும், கலைஞருக்கும், அவரது அணுகுமுறை மற்றும் கொள்கைகளுக்குமானது என்றார்.
முடிவுக்கு வரும் திரை வாழ்வு
அத்துடன், Gérardஇன் திரையுலக வாழ்வும் முடிவுக்கு வரலாம். இனி Gérardக்கு தங்கள் திரைப்படங்களில் வாய்ப்பு கொடுக்கலாமா இல்லையா என்பதை இயக்குநர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் ரீமா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |