புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி: விவரம் செய்திக்குள்...
பிரான்ஸ் அரசு புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கொண்டு வரமுயன்ற புலம்பெயர்தல் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தோல்வியை சந்தித்தது.
கடுமையான கட்டுப்பாடுகள்
அந்த மசோதா, குற்றச்செயல்களில் ஈடுபட்டு, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவதை எளிதாக்கும் விதத்திலும், புலம்பெயர்ந்தோர் தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்துவருவதை மேலும் கடினமாக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
Photograph: Gonzalo Fuentes/AP
வாக்கெடுப்பு தோல்வி
ஆனால், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று அந்த மசோதா வாக்கெடுப்புக்கு கொண்டுவரப்பட்டபோது, வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடதுசாரி மற்றும் நடுநிலை உறுப்பினர்களும் இணைந்து அந்த மசோதாவை தோற்கடித்துவிட்டனர்.
இடதுசாரியினர், கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருப்பதாகவும், வலதுசாரியினரோ, கட்டுப்பாடுகள் கடுமையாக இல்லை என்றும் கூறி, மொத்தத்தில் மசோதாவை தோல்வியடையச் செய்துவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |