பிரித்தானியாவிலிருந்து 24 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்: ருவாண்டாவுக்கு அனுப்பும் விடயத்தில் உறுதியாக நிற்கும் பிரீத்தி பட்டேல்
நேற்று, 24 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் அல்பேனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன் கடத்தல்காரர்களால் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்.
மேலும், 56 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டுக் குற்றவாளிகள், ஆயுதங்கள் மற்றும் போதைக் குற்றங்களில் ஈடுபட்டது மற்றும் அவசர உதவிக் குழுவினர் ஒருவரைத் தாக்கியது ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆகியோரும் அந்த நாடுகடத்தப்பட்டவர்களில் அடங்குவர்.
மேலும். 2015ஆம் ஆண்டு லொறியின் பின்னால் ஏறி பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஒருவரும், தனது விசாக்காலம் முடிந்த பிறகும் பிரித்தானியாவில் தங்கியவர் ஒருவரும் கூட நாடு கடத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் விடயத்தில் உறுதியாக நிறும் பிரீத்தி பட்டேல், ருவாண்டாவுக்கு புலம்பெயர்ந்தோரை அனுப்பும் முதல் விமானம் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.