பிரித்தானியாவிலிருந்து 46 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்... கிலியை ஏற்படுத்தியுள்ள தகவல்
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ருவாண்டா திட்டம் கைவிடப்பட்டதாக ஒரு பக்கம் அறிவித்தாலும், மறுபக்கம், அமைதியாக புலம்பெயர்ந்தோர் 46 பேர் நாடுகடத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ருவாண்டா திட்டத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானங்கள்
பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், முந்தைய அரசின் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
ஆனால், ருவாண்டா திட்டத்துக்காக ரிஷி அரசு ஏற்பாடு செய்திருந்த அதே விமானங்களில் புலம்பெயர்ந்தோர் 46 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
ஆம், புலம்பெயர்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களும் வெளிநாட்டுக் குற்றவாளிகளுமாக 46 பேரை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கே நாடுகடத்தியுள்ளது பிரித்தானிய அரசு.
புலம்பெயர்ந்தோருடன் நேற்று முன்தினம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, வியட்நாமில் அந்நாட்டவர்களை இறக்கிவிட்டுவிட்டு, பின்னர், நேற்று காலை 9.00 மணிக்கு Timor-Leste நாட்டைச் சென்றடைந்துள்ளது.
அதாவது, இம்முறை பிரித்தானியாவிலிருந்து வியட்நாம் மற்றும் Timor-Leste நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
ஆக, லேபர் அரசு புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்துவிட்டதாக கூறினாலும், அமைதியாக புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் வேலையைத் துவங்கிவிட்டது.
இந்த செய்தி, சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் கிலியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |