தினமும் ரூ.121 செலுத்தினால் கூடுதலாக ரூ.17 லட்சம் கிடைக்கும்: LIC -யின் பாலிசி
பெண் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக எல்.ஐ.சி (LIC) சிறப்பான பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பெண் குழந்தைகள் பிறந்த வீட்டில் அவரது படிப்பு, திருமணம் என பெற்றோர்கள் இன்றளவும் கூட கவலைப்படுகின்றனர்.
பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்காக எல்.ஐ.சி அறிமுகப்படுத்திய பாலிசி மூலம் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் படிப்பு, திருமணத்திற்கு போதுமான தொகையை பெற முடியும். அந்த பாலிசி தான எல்.ஐ.சியின் கன்யதான் பாலிசி (kanyadan scheme)
கன்யதான் பாலிசி (kanyadan scheme)
கன்யதான் திட்டமானது பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையை போக்கும் திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தினமும் ரூ.121 செலுத்த வேண்டும்.
அதன்படி மாதத்திற்கு சுமார் ரூ.3,600 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 25 ஆண்டுகள் ஆகும். அப்படியானால் திட்டம் முடிந்தவுன் ரொக்கமாக ரூ.27 லட்சம் கிடைக்கும்.
அதாவது இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் 25 வருடங்களுக்கு வெறும் ரூ.10,80,000 மட்டுமே செலுத்தியிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ரூ.17 லட்சம் வட்டியுடன் ரூ.27 லட்சம் கிடைக்கும்.
இந்த கன்யதான் திட்டத்தில் பணம் செலுத்த தொடங்கிய 13 முதல் 25 ஆண்டுகள் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சேர்வதற்கு பெண் குழந்தையின் குறைந்தபட்ச வயது 1 ஆக உள்ள நிலையில் தந்தையின் வயது 30 -க்குள் இருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |