Post Office -ல் ரூ.5 லட்சம் Deposit செய்து கூடுதலாக ரூ.2 லட்சம் பெறலாம்! திட்டம் பற்றிய விவரங்கள் உள்ளே
அஞ்சல் அலுவலகத்தில் 5 லட்சம் முதலீடு செய்து வட்டியில் இருந்து மட்டும் 2 லட்சம் ரூபாய் பெறக்கூடிய திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்களது பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அஞ்சல் அலுவலகம் ஒரு சிறந்த வழியாகும். அதேபோல, மக்கள் தான் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அது பாதுகாப்பாகவும், சிறந்த பலனை தரக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.
அத்தகைய அம்சங்களை கொண்டது தான் தபால் அலுவலகத்தின் திட்டங்கள். அதில், அதிக வட்டி அளிக்கக்கூடிய போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் (Post office Time Deposit Scheme) பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
Post office Time Deposit Scheme
சிறந்த வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இங்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு திட்டங்களில் ஒன்று முதலீட்டாளர்கள் வட்டி மூலம் மட்டுமே லட்சங்களை சம்பாதிக்க உதவுகிறது.
போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் (Post office Time Deposit Scheme) ஐந்தாண்டு திட்டத்தில், பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், வருமானமும் வலுவானது. இதன் காரணமாக, இது பிரபலமான வருவாய் திட்டங்களில் ஒன்றாகும்.
ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் சிலவற்றைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். மேலும் அதில் சிறந்த வருமானத்தைப் பெற முடியும்.
அந்தவகையில், தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்பு திட்டங்கள் இப்போது மிகவும் பிரபலமாக உள்ளன. போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது 7.5 சதவீத வருடாந்திர வட்டி (Annual interest) வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் 1, 2023 அன்று, ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
முதலீட்டாளர்கள் பல்வேறு காலக்கட்டங்களுக்கு அஞ்சல் அலுவலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் கீழ், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு பணத்தை Deposit செய்யலாம்.
ஒரு வருடத்திற்கு முதலீடு செய்தால் 6.9 சதவீத வட்டியும், 2 அல்லது 3 வருடங்கள் பணத்தை முதலீடு செய்தால் 7 சதவீத வட்டியும், போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 5 வருடங்கள் முதலீடு செய்தால் 7.5 சதவீத வட்டியும் கிடைக்கும்.
ஒரு வாடிக்கையாளர் ஐந்து ஆண்டுகளுக்கு 5 லட்சத்தை முதலீடு செய்து அவருக்கு 7.5 சதவிகித வட்டி விகிதத்தில் கிடைக்கும். அதாவது 5 ஆண்டுகள் முதிர்வு காலத்தில், வட்டி மற்றும் முதலீட்டுத் தொகை உட்பட மொத்த முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக அதிகரிக்கும்.
அதாவது இதில் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதில் வட்டி மட்டுமே ரூ.2,24,974 கிடைக்கும்.
இந்த சேமிப்புத் திட்டத்தில், ஒற்றைக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் கணக்கை அவரது குடும்ப உறுப்பினர் மூலம் தொடங்கலாம். இதில், குறைந்தபட்சம், 1,000 ரூபாயில் கணக்கு துவங்கலாம். இதில் ஆண்டு அடிப்படையில் வட்டி பணம் சேர்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |