வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை
வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை (4ஆம் திகதி) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும்.
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும்.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
மேலும், 6ஆம் திகதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |