வலுவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெறும்.
இதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வரும் 1ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்களிலும், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், வரும் 2 ஆம் திகதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும், தமிழ்நாட்டின் சில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |