ILT20: சூப்பர் ஓவரில் திரில் வெற்றி - டெசர்ட் வைப்பர்ஸை வீழ்த்திய எம்ஐ எமிரேட்ஸ்
Desert vipers and mi emirates match in super over: எம்ஐ எமிரேட்ஸ் அணி சூப்பர் ஓவரில் டெசர்ட் வைப்பர்ஸை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
MI எமிரேட்ஸ், டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நேஷனல் லீக் டி20 அபு தாபியில் நடந்தது.
நிக்கோலஸ் பூரன் 89 ஓட்டங்கள்
நாணய சுழற்சியில் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, MI எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
Quoting Babar Azam, "The Straight Drive is my favourite shot!" And my word what a shot this was! 😍🤤 #DPWorldILT20 #DVvMIE #AllInForCricket #WhereTheWorldPlays https://t.co/K8rG5oMywW
— International League T20 (@ILT20Official) November 28, 2026
குசல் பெரேரா 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 57 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் MI எமிரேட்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் பாபர் அஸாம் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சொதப்பினார்.
எனினும் பஹர் ஜமான் 42 ஓட்டங்களும், கோஸ் 35 ஓட்டங்களும் விளாசினர். ஷதாப் கான் டக் அவுட் ஆக, ஹெட்மையர் 3 சிக்ஸர்கள் அடித்து 25 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி கட்டத்தில் விருத்தியா அரவிந்த் 12 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாசினார். டெஸர்ட் அணியும் 186 ஓட்டங்கள் எடுக்க போட்டி டை ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவர்
வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில், எம்ஐ எமிரேட்ஸ் அணிக்காக பந்துவீசிய கிறிஸ் ஜோர்டன், முதல் பந்திலேயே ஹெட்மையரை ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் டெசர்ட் வைப்பர்ஸ் அணி வெறும் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி பந்தில் சிக்சர்
8 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், எம்ஐ எமிரேட்ஸிற்காக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், சூப்பர் ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பி அணிக்கு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுத்தந்தார். அவரது ஆட்டமே வெற்றிக்கான முக்கிய காரணமாக அமைந்தது.