டீ விற்பவரின் மகன் - UPSC தேர்வில் முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று ஐஏஎஸ்
டீ விற்பவரின் மகன், UPSC தேர்வில் முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார்.
டீ விற்பவரின் மகன் ஐஏஎஸ்
ராஜஸ்தான் மாநிலத்தின் சுமலை கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தேசால் டான் சரண்.

இவரின் தந்தை குஷால்டன் சரண், கிராமத்தில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து 10 பேர் அடங்கிய தன்னுடைய குடும்பத்தை ஆதரித்து வந்தார்.
தன்னுடைய நிதி நிலைமை மோசமாக இருந்தாலும், தன்னுடைய குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என குஷால்டன் சரண் பல்வேறு கடன்களை வாங்கி அவர்களை படிக்க வைத்துள்ளார்.

தேசால் டான் சரண் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 7 சகோதரர்கள் ஆவார். இதில் இந்திய கடற்படையில் பணியாற்றிய அவரது மூத்த சகோதரர் ஒருவர் கடலில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். அப்போது, தேசால் டான் சரண் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் பொறியாளர் ஆக திட்டமிட்ட இவர், JEE முதன்மை தேர்வுக்கு தயாரானார். முதல் முயற்சியிலே நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற அவர், ஜபல்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றார்.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு காத்திருந்தாலும், அவரது ஐஏஎஸ் ஆகும் கனவிற்காக டெல்லி சென்று UPSC தேர்வுக்கு தனது பயிற்சியை தொடங்கினார்.
2017 ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், இந்திய அளவில் 82வது இடம் பிடித்து ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |