விவாகரத்துக்கு பின் Life இன்சூரன்ஸ் பாலிசி என்ன ஆகும்? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது விடயம்
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணமானவர்கள் தங்கள் துணையை, தனிப்பட்ட பாலிசியில் சேர்க்கவோ அல்லது சேர்க்காமல் இருக்கவோ முடியும்.
ஆனால், இன்சூரன்ஸ் பாலிசியில் விவாகரத்து காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை, உடனடியாக சரி செய்ய வேண்டியது என்பது மிகவும் அவசியமான ஒன்று.
தம்பதியில் யாராவது ஒருவரை விலக்கவோ அல்லது மற்றவரை முழுவதும் ஒதுக்கவோ முடியும் என்பதால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் விவாகரத்து ஆனவர்களின் பாலிசியை எப்படி முடிவு செய்ய வேண்டும் என அறிந்து கொள்ள வலியுறுத்துவர்.
துணையை பயனாளராக சேர்த்தல்
திருமணமான பெண்கள் தங்கள் உரிமைகளை சுயமாக தீர்மானிக்கவும், கணவரின் ஆதிக்கத்தில் இருந்து வெளிப்படவும் சொத்துரிமை சட்டம் பயன்படுகிறது.
அதேபோல் கணவர் ஒரு பாலிசியை எடுத்துக் கொண்டு அதில் மனைவியை பயனாளராக சேர்க்க முடியும். எனினும், விவாகரத்துக்கு பின்னரும் மனைவி அந்த பலனை அனுபவிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனுமதிக்கின்றன.
Term பாலிஸிகளில் மரணத்திற்கான இழப்பீடு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் மனைவியை வாரிசாக குறிப்பிட்டிருந்தால் அதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.
இந்த பாலிசியில் விவகாரத்தினால் மாற்றம் இருக்காது. திருமணமான பெண்கள் சொத்துரிமை சட்டத்தின்கீழ் Term பாலிசியை எடுத்திருந்தால் மனைவியை பலன்தாரராக சேர்க்கலாம்.
Life இன்சூரன்ஸ் பாலிசி
எனினும், திருமணமானவர்கள் ஜோடியாக Life இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதே புத்திசாலித்தனமான முடிவு ஆகும். ஏனெனில், Policy Premium தனித்தனியாக செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்பதுடன் பலன் இருவருக்குமே சேரும்.
ஒருவேளை கணவர் இறந்துவிட்டால் தானாகவே மனைவிக்கு பாலிசியின் பலன் வழங்கப்படும். அதே போல், இதுபோல் ஜோடியாக எடுக்கப்படும் பாலிசியில் மனைவியை வாரிசாக குறிப்பிட்டிருக்கும்பட்சத்தில், விவாகரத்து ஆனாலும் மனைவிக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.
விவகாரத்து பெறுவது தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் ஒன்றாக இருப்பதனால், திருமணத்திற்கு பின் மனைவியின் பெயரை கணவர் பாலிசியில் சேர்க்க வேண்டும்.
இது ஒருவேளை விவாகரத்து நடந்தாலோ அல்லது அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ மனைவிக்கு உரிய இழப்பீடு கிடைக்கும். இதன்மூலம் அவர் தம் வாழ்வை சிரமமின்றி நடத்த முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |