வெள்ளை மாளிகை அருகே இளைஞர் துப்பாக்கிச்சூடு! சுட்டுக்கொன்ற அதிகாரிகள்..தெரியவந்த பின்னணி
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுட்டுக்கொன்ற அதிகாரிகள்
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே 21 வயது இளைஞர் ஒருவர், ட்ரம்ப் கட்டிடத்திற்குள் இருந்தபோது வெளியே சோதனைச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அவரது பெயர் நசிரே பெஸ்ட் என்று தெரிய வந்தது.
ஒசாமா பின்லேடன் என்று கூறிக்கொண்டார்
இந்த நிலையில், நசிரே பெஸ்ட்டின் பழைய சமூக ஊடகப் பதிவுகளை அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர்.
அப்போது அவர் தன்னை உண்மையான ஒசாமா பின்லேடன் என்று கூறிக்கொண்டார் என CNN செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், குற்றம்சாட்டப்பட்ட அந்த இளைஞர், இதற்கு முன்பும் டொனல்ட் ட்ரம்ப்பிற்கு எதிராக இணையத்தில் மிரட்டல்களை விடுத்திருந்தார் என்றும் அந்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |