ஒரே நாளில் பிரித்தானியரை கோடீஸ்வரராக்கிய புதையல்: அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இங்கிலாந்தில் வாழும் ஒருவர் கண்டெடுத்த புதையல் ஒன்று அவரை ஒரே நாளில் கோடீஸ்வரராக்கியிருக்கிறது. அப்படி அவருக்கு என்ன புதையல் கிடைத்துவிட்டது? ஒரு பை நிறைய தங்க காசுகளா? இல்லை... ஒரே ஒரு தங்க நாணயம், அதுவும் ஒரு இஞ்ச் விட்டமும் 0.15 அவுன்ஸ் எடையும் கொண்ட ஒரே ஒரு தங்க நாணயம்.
அவ்வளவுதான். ஆனால், அதன் மதிப்பு 200,000 பவுண்டுகள், அதாவது கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகம். அப்படி என்ன சிறப்பு அந்த நாணயத்தில்? அந்த நாணயம் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
9ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த நாணயம், West Dean என்ற கிராமத்தில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடும் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அந்த நாணயத்தால் ஒரே நாளில் கோடீஸ்வரராகிவிட்டார் அந்த பிரித்தானியர். (ஆனால், அவர் தன் பெயரை வெளியிட விரும்பவில்லையாம்!)



 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        