பிரான்சில் மோசமடையும் நிலைமை; அஸ்ட்ராஜெனேகா மீதான நம்பிக்கையை அதிகரிக்க பிரதமர் எடுத்த முடிவு!
பிரான்சின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்க விரும்புவதாகக் கூறினார்.
அதற்காக விரைவில் தான் அந்த தடுப்புசியை பெற்றுக்கொள்வதாக ஜீன் காஸ்டெக்ஸ் உறுதியளித்துள்ளார். நாடு கிட்டத்தட்ட கோவிட்-19 பெருந்தொற்றின் முன்றாவது அலைக்குள் நுழைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் 29,975 புதிய பாதிப்புகள் மற்றும் 320 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத பாதிப்பு எண்னிக்கை 4,168,394-ஆகவும், இறப்பு எண்னிக்கை 91,324-ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், வெகுஜன தடுப்பூசி திட்டம் மட்டுமே மக்களை காப்பாற்றும் ஒரே வழி என கூறிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்வதற்காக, தான் அந்த தடுப்பூசியை செலுத்திக்கொள்ள விருப்பப்படுவதாக கூறியுள்ளார்.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பெற்றவர்கள் இரத்தம் உறைந்து பாதிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார்களுக்கு மத்திலியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியாழ் இரத்த உறைவு ஏற்ப்படும் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று அவர்கூறியுள்ளார்.
அதேபோல், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது, அதிக பலனளிக்கக்கூடியது என்றும் தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகளை மிகவும் குறைத்துள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.