உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவும் Detox water.., வீட்டிலேயே தயாரிக்கலாம்
Detox water என்பது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை புத்துணர்ச்சியாக்க உதவும் ஒரு பானமாகும்.
தற்போது ஒழுங்கற்ற தூக்கம், ஒழுங்கற்ற உணவுப்பழக்கம், மன அழுத்தம் ஆகியவற்றால் நம் உடலைச் சுத்தப்படுத்த மறந்து விடுகிறோம்.
Detox water தினமும் குடித்து வருவதால் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை நச்சுகளிலிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது.
சிறுநீர், கல்லீரல் போன்ற உறுப்புகளில் இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் திறன் இருக்கிறது.
இருந்தாலும் மாசு, பாதுகாப்புகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் காரணமாக சில நச்சுக்களை அதிக அளவில் நம் உடலால் உட்கொள்ளப்படுகின்றன.
இவை நமது உடலின் திசுக்கள் மற்றும் உயிரணுக்களில் ஆழமாகச் சேமிக்கப்பட்டு, இறுதியில் நமது உடல் மற்றும் மன திறன்களின் செயல்பாட்டை மெதுவாக்கலாம்.
Detox water எடை இழப்பு, மேம்பட்ட செரிமானம், கல்லீரல் சிறப்பாக செயல்படுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் ஆற்றலை அதிகரிப்பது உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.
அந்தவகையில், உடலை சுத்தப்படுத்தி புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் சில Detox water-களை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. எலுமிச்சை + புதினா
முதலில் ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைசாறு பிழிந்து எடுத்துகொள்ளவும்.
பின் அதனுடன் சிறிதளவு புதினா மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் ஒன்றாகச் கலக்கிக்கொள்ளவும்.
அடுத்து இதனை முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து காலையில் எடுத்து குடித்தால், உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
இதைக் குடிப்பதால் கல்லீரல் சுத்தகரித்து, வயிற்று புண்களை ஆற்றவும், அஜீரணத்தைப் போக்கவும், உடலுக்குக் குளிர்ச்சியளிக்கவும் உதவுகிறது.
2. வெள்ளரிக்காய் + இஞ்சி
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளரிக்காய், சிறிய துண்டு இஞ்சி மற்றும் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
பின் இதனை அனைத்தையும் ஒன்றாக கலக்கி,ஃப்ரிட்ஜில் சில மணி நேரம் வைத்து குடித்தால், கோடை காலத்திற்கு இதமாக இருக்கும்.
3. தர்பூசணி + துளசி
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தர்பூசணிப் பழம் மற்றும் ஒரு கைப்பிடி அளவு துளசி இலை மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
பின் இது அனைத்தையும் ஒன்றாக கலக்கி, ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக எடுத்து குடிக்கலாம்.
இந்த பானத்தை குடிப்பது மூலமாக சருமம் மேம்படுகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
4. நெல்லிக்காய் + இலவங்கப்பட்டை
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய இரண்டு நெல்லிக்காய், ஒரு துண்டு இலவங்கப்பட்டை மற்றும் 4 கப் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
பின் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து குடித்தால் சுவையையும் கொடுத்து புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இந்த பானம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும் மற்றும் உடலைச் சுத்திகரிக்கும்.
Detox waterன் நன்மைகள்
- எடை இழப்பிற்கு உதவும் கெட்ட நாற்றத்தை நீக்குகிறது
- உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது
- ஆற்றல் நிலைகளை மேம்படுத்துகிறது
- உடல் எடையை குறைக்க உதவுகிறது
- உடலின் pH அளவை சமன் செய்கிறது
- செரிமானத்தை மேம்படுத்துகிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
- சருமத்தை தெளிவாக்குகிறது
- வீக்கத்தைக் குறைக்கிறது
- செயல்பாட்டை மேம்படுத்துகிறது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |