இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் படிக்கல் சதம்
Devdutt Padikkal century vs sri lanka in Colombo: கொழும்பு டெஸ்டில் இந்திய அணியின் தேவ்தத் படிக்கல் சதம் விளாசினார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்கள் குவித்தார்.
இரண்டாவது டெஸ்ட்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. கே.எல்.ராகுல் 18 ஓட்டங்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்கள் விளாசியும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் தேவ்தத் படிக்கல் மற்றும் ஷுப்மன் கில் கூட்டணி நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தது. அரைசதம் அடித்த அணித்தலைவர் ஷுப்மன் கில் (Shubman Gill) 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
படிக்கல் சதம்
அடுத்து வந்த ரிஷாப் பண்ட் மணிக்கட்டில் பந்துபட்டு ஏற்பட்ட வலியால், 3 ஓட்டங்களில் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இதற்கிடையில் அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார்.
அணியின் ஸ்கோர் 281 ஆக உயர்ந்தபோது படிக்கல் 117 ஓட்டங்களில் (12 பவுண்டரிகள்) நுவந்தா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் குவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 43 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அசிதா பெர்னான்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |